2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஆபாசத்தை திணிக்கின்றனர்- பிரபல நடிகை புகார்

Freelancer   / 2021 ஜூன் 08 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் எரிகா பெர்ணான்டஸ். அதன்பின் விரட்டு, விழித்திரு போன்ற படங்களில் நடித்த இவர், தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பொலிவூட் பக்கம் போனார்.

தற்போது அங்கு முன்னணி நடிகை வலம் வருகிறார். குறிப்பாக ‘குச் ரங் பியார் கே ஐஸே பி’ என்ற இணைத் தொடரின் 2 பாகத்திலும் டாக்டர் சோனாக்ஷி போஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். தற்போது அத்தொடரின் 3ஆவது பாகத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை எரிகா பெர்ணான்டசுக்கு மேலும் சில வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் சொன்னதால், அதில் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

 இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் : “சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச இணையத் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எவ்வித காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதிலில்லை.

போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத ஆபாச காட்சிகளை கெமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கதைக்கு தேவைப்பட்டால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

ஆனால் வேண்டுமென்றே அத்தகைய காட்சிகளை திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால், அதற்கு நான் உடன்படமாட்டேன். அதனால் தான் தேடிவந்த சில வாய்ப்புகளை நிராகரித்தேன்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .