2022 மே 20, வெள்ளிக்கிழமை

நடிகைக்கு மூக்கில் முத்தமிட்ட மோசடி மன்னன்

Editorial   / 2022 ஜனவரி 17 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை:

கான்மேன் சுகேஷ் உடன் படு நெருக்கமாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 ரூ. 200 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். சுகேஷ் சந்திரசேகர் செய்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர்களான சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங்கிடம் ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் கான்மேன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த விவகாரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸும் சிக்கி உள்ளார்.

 ரூ. 200 கோடி மோசடி தொடர்பாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸிடம் சுமார் இரண்டு, மூன்று முறை அமலாக்கத் துறையினர் பல மணிநேரங்கள் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். ரூ. 10 கோடிக்கும் அதிகமான பரிசுப் பொருட்களை சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கு அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடியில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகர் ரோகிணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உடன் அவர் பேசிய தொலைபேசி அலைப்புகள் மற்றும் மெசேஜ்களின் அடிப்படையில் இந்த மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ்க்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்திய அளவில் ஏகப்பட்ட பிரபலங்களை கைக்குள் வைத்து இருப்பதாகவும் பாலிவுட் பட வாய்ப்பை பெற்றுத் தருவதாகவும் சுகேஷ் சந்திரசேகர் வாக்கு கொடுத்த நிலையில் தான் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் அவரது வலையில் விழுந்தார் என்றும் கூறப்படுகிறது.

இலங்கை பெண்ணான ஜாக்குலினுக்கு பாலிவுட் பட வாய்ப்பை பெற்று தந்ததே கான்மேன் சுகேஷ் தான் என்றும் ஹாலிவுட் பட வாய்ப்பையும் சமீபத்தில் பெற்றுத் தருவதாக அவர் அறிவித்த சில தினங்களிலேயே நடிகைக்கு ஹாலிவுட் பட வாய்ப்பிற்கான அழைப்பும் வந்தது என பொலிஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

ஆனால், நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சுகேஷுக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றே பொலிஸ் விசாரணையில் கூறி வந்த நிலையில், தற்போது நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் மற்றும் கான்மேன் சுகேஷ் சந்திரசேகர் இருவரும் படுக்கையறையில் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. சுகேஷ் நடிகை ஜாக்குலினின் மூக்கில் முத்தம் கொடுக்கும் அந்த புகைப்படம் நடிகைக்கு மேலும், சிக்கலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .