2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

சிம்ரன் கொடுத்த அப்டேட்

J.A. George   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படம் ’அந்தகன்’. இந்த படத்தில் பல வருடங்களுக்குப் பின்னர் பிரசாந்துடன் சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அண்மையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் ’அந்தகன்’ படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து விட்டதாகவும் இந்த படத்தை திரையில் பார்க்க எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் வெளியான அந்தாகான் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படம் பிரசாந்துக்கு ஒரு நல்ல ரீ என்ட்ரி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .