2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

நடிகை நீபாவின் வேக்சின் டிரஸ்

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையான நீபா, 2-வது டோஸ் வேக்சின் போடும்போது அணிந்திருந்த டிரஸைப் பார்த்து சில நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

பெருசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமான நீபா, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைய தளபதி விஜய் - அசின் கூட்டணியில் உருவான காவலன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்ததும், பரவலான கவனத்தை பெற்றார். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என வெள்ளித்திரையில் நுழைந்த அவருக்கு, அங்கு கிடைத்த அனுபவங்கள் கசப்பானதாக இருந்தது.

அவருடைய அப்பா மற்றும் அம்மா ஆகியோர் ஏற்கனவே நடன இயக்குநர்களாக இருந்ததால், இவரும் நடனம் கற்று இணை நடன இயக்குநராக சில படங்களில் பணிபுரிந்தார். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி பெருசு திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆனால், வெள்ளித்திரையில் அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அப்பா உடல் நலிவுற்று இருந்ததால், மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டபோது கவர்ச்சியாக நடிக்கும் கதாப்பாத்திரங்கள் மட்டுமே வாய்ப்பாக வந்துள்ளது.

குடும்ப சூழ்நிலை காரணமாக இறுக்கமான மனதுடன் அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டார். சில படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்த அவர், பின்னர் சின்னத்திரையில் கவனம் செலுத்த தொடங்கினார். மானாட மயிலாட நடன நிகழ்ச்சி அவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த அவர், வேலூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.

அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, கசப்பான வாழ்க்கைப் பயணத்தையும் பகிர்ந்துகொண்டார். அதில், கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் அனைவரும் கால் கேர்ள்ஸ் இல்லை என வெளிப்படையாக பேசினார். கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகள் அனைவருக்கும் ஏதாவதொரு பின்புல சூழ்நிலை இருக்கும் என தெரிவித்த நீபா, அதற்கு உதாரணமாக மும்தாஜை குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .