2022 ஜூலை 04, திங்கட்கிழமை

உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா...

Freelancer   / 2022 மே 26 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை தமன்னாவுக்கு தமி­ழில் சொல்­லிக்­கொள்­ளும்­ப­டி­யான வாய்ப்­பு­கள் அமை­யா­விட்­டா­லும், பக்கத்து தேசமான தெலுங்­கி­லும், வடக்கு தேசமான இந்­தி­யி­லும் தமன்­னா­வுக்கு இன்­ற­ள­வும் வர­வேற்பு உள்­ளது.

அண்­மை­யில் கூட ஒரு தெலுங்­குப் படத்தில் ஒற்­றைப்­பா­ட­லுக்கு நட­ன­மாடி உள்­ளார். அதை­ய­டுத்து,  இந்­தி­யில் உரு­வா­கும் 'பப்ளி பவுன்­சர்' என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார்.

இந்த பப்ளி பவுன்சர் திரைப்படம் மிக வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம், கதா­பாத்­தி­ரம் அமைந்­தி­ருப்­ப­தால் தமக்கு இந்­தப் படம் திரை­யு­ல­கில் பெரும் திருப்புமுனையாக அமை­யும் என்று நம்­பு­வ­தா­க கூறுகிறார் நடிகை தமன்னா.

சினிமா,  அரசியலில் இருக்கும் முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்­கும்,  பிரபலங்களுக்கும் பொது இடத்தில் பாது­காப்பு அளிப்­ப­வர்­க­ளை­யும் கேளிக்கை விடுதி உள்­ளிட்ட இடங்­களில் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளை­யும் 'பவுன்­சர்' என்று குறிப்­பி­டு­கி­றார்­கள்.

ஒரே மாதி­ரி­யான சீருடை அணிந்து,  நல்ல உடற்­கட்­டு­டன் இருக்­கும் இவர்க­ளுக்கு கணி­ச­மான ஊதி­யம் வழங்­கப்­படு­கிறது. 

ஆண்­கள் மட்­டுமே ஈடு­பட்டு வந்த இந்தத்து­றை­யில்,  இப்­போது பெண்­களும் கால்­ப­தித்­துள்­ள­னர். ஒரு பெண் 'பவுன்­சர்' பற்­றிய கதையை மைய­மாக வைத்து, 'பப்ளி பவுன்­சர்' திரைப்படம் உரு­வாகி உள்­ளது.

மேலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாடுவது,  சில நிமிடங்களே திரையில் தோன்றும் கதாபாத்திரம் என்றாலும்,  ரசிகர்களின் மனதைக் கவரும் எனில் அதில் நடிப்பது ஒன்றும் தவறல்ல. ஒரு சினிமா நட்சத்திரமாக ரசிகர்களை மகிழ்விப்பது என் கடமை என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் தமன்னா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .