Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
George / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
'அட்டகத்தி திரைப்படம் வெற்றியடையவில்லை என்றால் நான் எனது கருத்துக்களை ஒரமாக வைத்துவிட்டு, வெற்றிப்பெறுவதற்காக வேறு ஏதாவது சினிமா இயக்கியிருப்பேன். அட்டகத்தி வெற்றிப்பெற்றதால் மெட்ராஸ் திரைப்படமும், மெட்ராஸ் வெற்றிப்பெற்றதால் கபாலியும் எடுத்தேன். தற்போது கபாலி வெற்றிப்பெற்றுள்ளதால் இதேபோன்று வேறு சில திரைப்படங்கள் எடுக்கப் போகிறேன்' என இயக்குநர் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
'எனக்கு ரஜினி என்கிற சூப்பர் ஸ்டார் பிம்பம் அவசியம் தேவையாக இருந்தது. நான் யார் மூலமாக என் குரலை பேச வேண்டும் என்று நினைத்தேனோ, அந்த குரல் மூலமாக தான் பேசியிருக்கிறேன். அந்த குரலின் சத்தம், விரீயம் அனைவருடைய காதையும் கிழித்திருக்கிறது என்று நம்புகிறேன். அடுத்ததாக அந்த குரல் அனைவருடைய வீடுகளிலும் தொலைக்காட்சியில் பேசும். இத்திரைப்படம் மூலமாக பல விவாதங்கள் நடைபெற்ற சந்தோஷம் எனக்கு கிடைத்திருக்கிறது' என்றும் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் 25 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் ரஞ்சித் கபாலி திரைப்படம் குறித்தும், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகள், நன்மைகள் குறித்தும் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.
'கபாலி திரைப்படத்தை ஏன் எடுத்தேன் என்றும், இந்த திரைப்படத்தின் நோக்கம் என்ன என்றும் எனக்கு தெரியும். எனது நோக்கம் சரியாக போய் சேர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இந்தப் திரைப்படம் வெளியாகும் முதல் நாளே, இந்த திரைப்படத்தை காலி பண்ண சிலர் முயற்சிப்பார்கள் என்று எனக்கு தெரியும். அதை என் உதவியாளர்களிடம் ஏற்கெனவே கூறியிருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே முதல் நாளில் சிலர் இந்த திரைப்படத்தை எதிர்த்தார்கள்' என்று ரஞ்சித் கூறியுள்ளார்.
'ஆனால் மக்களிடம் அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. மக்கள் கொண்டாடவில்லை என்றால் இத்திரைப்படம 25 நாட்கள் கடந்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓட வாய்ப்பில்லை. இந்தப் திரைப்படம் கமர்ஷியலாக வெற்றியடைய வேண்டும் என ஏன் நினைத்தேன் என்றால், அப்போது தான் முற்போக்கு கருத்துக்கள் சார்ந்த சினிமாக்கள் நிறைய வரும். தோல்வியடைந்தால் அதைப் பற்றி அதற்குப் பிறகு பேசவே முடியாது.
கபாலியில் பிரச்சினை இருக்கிறது என்பதும் அது என்ன பிரச்சினை என்பதும் எனக்கு தெரியும். அதையும் மீறி தான் இத்திரைப்படத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று யோசித்தோம்' என்றும் ரஞ்சித் தனது மனதிலுள்ளதை சொல்லியேவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago