2025 மே 20, செவ்வாய்க்கிழமை

த்ரிஷாவின் அந்த 10 வருடம்...

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


'லேசா லேசா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. அன்று ஆரம்பமான அவரது சினிமாப் பயணம் தற்போது 10 வருடங்களைக் கடந்துவிட்டது. 'மௌனம் பேசியதே' திரைப்படத்தில் நடித்தபோதே சினிமாவை விட்டு வெளியேற இருந்தவர், விக்ரமுடன் நடித்த 'சாமி' திரைப்படத்தின் ஹிட் காரணமாக, சினிமாவில் நிலையான நடிகையாகி விட்டார்.

அத்துடன், நடிக்க வந்தது முதல் இப்போது வரை தனது உடற்கட்டை ஸ்லிம்மாக பாதுகாத்தும் வருகிறார். இதனால் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடிப்பதற்கும் அவரது தோற்றம் ஏற்ற வகையில் உள்ளது.

இதற்கிடையே ராணாவுடன் காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்களில் சிக்கியிருந்தவர், இப்போது அதிலிருந்து மீண்டு விட்டார். தமிழில் மூன்று திரைப்படம், தெலுங்கில் 2 திரைப்படம் என கால்சீட் டைரியையும் புல் பண்ணி வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், தன்னிடம் நெருங்கி பழகும் சில வளர்ந்து வரும் நடிகைகள், எப்போது நடிப்புக்கு முழுக்குப்போடப் போகிறீர்கள்? என்று த்ரிஷாவைக் கேட்டதற்கு, 'அப்படியொரு ஐடியாவே இல்லை. இன்னும் 10 வருசத்துக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்கப்போகிறேன்' என்கிறாராம்.

'மார்க்கெட்டில் தக்க வைத்துக்கொள்ள என் உடற்கட்டையும் இப்படியே மெயின்டெயின் பண்ணப்போகிறேன். அது என்னால் முடியும்' என்றும் சொல்லி மார்தட்டுகிறாராம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X