2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஒஸ்கார் விருதுகள் 2013...

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 25 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹொலிவூட் திரையிலகினரால் உயரிய விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் 2013, இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக டேனியல் டே லூயிஸ் தேரிவாகியுள்ளார். சிறந்த நடிகையாக ஜெனீபர் லோரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிறந்த இயக்குநராக ஆங் லீ விருது வென்றுள்ளதுடன் அவரது 'லைப் ஒப் பை' திரைப்படம் 4 விருதுகளையும் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த துணை நடிகராக ஜாங்கோ அன்செய்ன்ட் திரைப்படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வோல்ட்ஸ் தெரிவாகியுள்ளார். துணை நடிகையாக ஆன்னி ஹேதவே தேர்வாகியுள்ளார்.

சிறந்த நடிகர் டேனியல் டே லூயிஸ்
சிறந்த நடிகருக்கான விருதை லிங்கன் திரைப்படத்தில் நடித்த டேனியல் டே லூயிஸ் வென்றுள்ளார். இது அவருக்கு கிடைத்துள்ள 3ஆவது சிறந்த நடிகருக்கான விருதாகும். மேலும் இதுவரை அதிக முறை சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லூயிஸ்.

சிறந்த நடிகை ஜெனீபர் லாரன்ஸ்
'சில்வர் லைனிங்ஸ் பிளேபுக்' திரைப்படத்தில் நடித்த ஜெனீபர் லோரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார். 2ஆவது முறையாக ஒஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருக்கு கிடைத்துள்ள முதல் விருது இதுவாகும்.

2ஆவது முறையாக ஆங் லீக்கு விருது
லைப் ஆப் பை இயக்குநர் ஆங் லீ 2ஆவது முறையாக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மேலும் 2ஆவது முறையாக இயக்குநருக்கான விருதுப் போட்டியில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை அவர் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்படம் ஆர்கோ
சிறந்த திரைப்படத்துக்கான விருதினை ஆர்கோ பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது  'லைப் ஆப் பை' பெற்றது. அதேபோன்று சிறந்த விஷூவல் எபெக்ட்ஸுக்கான விருதையும் 'லைப் ஆப் பை' பெற்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதை 'பிரேவ்' பெற்றது. சிறந்த அனிமேட்டட் குறும்படத்துக்கான விருதை 'பேப்பர்மேன்' பெற்றது.

சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கான விருது 'லெஸ் மிஸரபிள்ஸ்' திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அன்னா கரேனினா தட்டிச் சென்றது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை 2ஆவது முறையாக வென்றுள்ளார் கிறிஸ்டோபர் வோல்ட்ஸ். இவர் இந்த விருதுக்கு இதுவரை 2 முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் விருதை வென்றுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 'இங்ளோரியஸ் பாஸ்டர்ஸ்ட்' திரைப்படத்துக்காக தனது முதல் ஆஸ்கரை வென்றவர் கிறிஸ்டோபர்.

சிறந்த துணை நடிகைக்கான விருதினை லெஸ் மிஸரபிள்ஸ் திரைப்படத்துக்காக ஆன்னி ஹேதவே வென்றார். இவர் ஒஸ்கார் வெல்வது இது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X