2025 மே 19, திங்கட்கிழமை

அஜித்துக்கு சத்திரசிகிச்சை: 4 மாதம் ஓய்வு

Menaka Mookandi   / 2013 மார்ச் 24 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


புதிய திரைப்படங்களில் நடித்து முடித்ததும், நடிகர் அஜீத்குமார் காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சத்திர சிகிசையின் பின்னர் அவர் நான்கு மாத கால ஓய்வு எடுக்கப்படவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அஜீத்குமார் இப்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜீத் - நயன்தாராவுடன் ஆர்யா, தப்சி ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அஜீத், வில்லன் ஆட்களுடன் மோதுகிற ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. ஒரு காரில் இருந்து இன்னொரு கார் மீது அஜீத் குதிப்பது போன்ற காட்சியில், 'டூப்' போடாமல் அவரே நடித்தார். அப்போது, அவருடைய வலது காலில் பலத்த அடிபட்டது. இந்நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜீத்துக்கு, காலில் கட்டுப்போட்டு டாக்டர்கள் சிகிச்சைளித்தார்கள்.

காலில் உள்ள வலியை பொறுத்துக்கொண்டு அஜீத் தொடர்ந்து அந்த திரைப்படத்தில் நடித்தார். அதற்காக வலி நிவாரண மாத்திரை - மருந்துகளை சாப்பிட்டுக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொண்டார். காலில் அவருக்கு நாளுக்கு நாள் வலி அதிகமாக, மீண்டும் தனது காலை வைத்தியரிடம் காண்பித்து பரிசோதித்துள்ளார் அஜீத்.

இதன்போது அவருக்கு ஆலோசனை வழங்கிய வைத்தியர்கள், காலில் சத்திர சிகிச்சை மேற்கொண்டால் மாத்திரமே வலி குறையும் என்று கூறியுள்ளனர். உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொண்டால் திரைப்பட அதிபர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், 2 திரைப்படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தபின், சத்திர சிகிச்சை செய்துகொள்ள அஜீத் முடிவு செய்திருக்கிறார்.

சத்திர சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாலும் அதன்பிறகு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதாலும், அஜீத் புதிய திரைப்பட வாய்ப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X