2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கமலுடன் நயனின் 10 நிமிடங்கள்...

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 28 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜைக்கு வந்த கமல்ஹாசனுடன் தனியாக 10 நிமிடம் பேசியுள்ளார் நடிகை நயன்தாரா. கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தில் நடிக்க அப்போது அவர் வாய்ப்பு கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

விஜய்யின் துப்பாக்கியை முடித்துவிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்து ஒரு திரைப்படம் தயாரிக்கப் போகிறார். ஆத்திரைப்படத்தின் பெயர் ராஜா ராணி. இந்த திரைப்படத்தை அட்லி இயக்குகிறார். இதில் ஆர்யா, ஜெய் இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை கமல்ஹாசனின் வீட்டில் நடைபெற்றது. அப்போது பூஜை முடிந்த பின்னர் கமல்ஹாசனுடன் பேச விரும்புவதாக நயன்தாரா கூறவே, கமல்ஹாசனும் தனியாக அழைத்துசென்று 10 நிமிடம் பேசியுள்ளார்.

அப்போது கமல்ஹாசனுடன் அடுத்த திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கமல் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.

இருப்பினும் கமல்ஹாசனின் அடுத்த தமிழ்ப் படத்தில் நயன்தாராவுக்கு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ ஒரு வாய்ப்பு நிச்சயம் உண்டு என்று அடித்துக் கூறுகிறார்கள் பூஜைக்கு வந்தவர்கள்.





You May Also Like

  Comments - 0

  • mohaed Monday, 29 October 2012 01:52 AM

    விரைவில் வெளிவர வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X