2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சந்திரமுகி 2ஆம் பாகத்தில் அஜித்...

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க நடிகர் அஜீத் குமாருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா ஹிட் திரைப்படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படமும் இதுவே. பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படம், தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் வெளியானது.

தற்போது சந்திரமுகியின் 2ஆம் பாகத்தை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் நடிக்க மாட்டேன் என ஏற்கெனவே ரஜினி கூறியிருந்தார். இந்த நிலையில் ரஜினி கதாபாத்திரத்தில் நடிக்க அஜீத்திடம் பேசி வருகிறார்களாம்.

சந்திரமுகி திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆப்தமித்ராவின் ரீமேக் ஆகும். இதன் அடுத்த பகுதியை ஆப்தரக்ஷகா என உருவாக்கினார் வாசு. இந்தப் திரைப்படத்தைத்தான் ரீமேக் செய்யப் போகிறார்களா? அல்லது அது வேறு கதையா என்பது தொடர்பில் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X