2025 மே 19, திங்கட்கிழமை

விஸ்வரூபம் 2...

Menaka Mookandi   / 2013 ஜூலை 08 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலக நாயகன் கமல் ஹாசன் இயக்கி நடிக்கும் விஸ்வரூபம் 2ஆம் பாகத்தின் முதல் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

கமல் ஹாசன் இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான விஸ்வருபம் திரைப்படம் பல சர்சசைகள் மத்தியில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தது.

இதைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட சில காட்சிகளை வைத்து, இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார் கமல்.

முதல் பாகம் அமெரிக்காவிலும் ஆப்கானிஸ்தானிலும் நடப்பதாகக் காட்டியிருந்தார். இதனால் பல சர்சைகள் கிளம்பின. இதனாலே என்னமோ இரண்டாம் பாகத்தை முழுக்க இந்தியாவில் நடப்பது போலவே கட்சிகளை அமைத்துள்ளார்.

திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் கமல்ஹாஸன். இதுவரை திரைப்படம் குறித்து எந்தத் தகவலையும் வெளியிடாமல் இருந்த கமல், முதல் முறையாக திரைப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி போஸ்டர்கள் மற்றும் டிசைன்களை வெளியிட்டுள்ளார்.

இந்த இரண்டாம் பாகத்தை கமல் தயாரிக்கவில்லை. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது கமலின் ராஜ்கமல் நிறுவனம் அளிக்கும் விஸ்வரூபம் 2 என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்பாகத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X