2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரஜினிக்கு ரூ.240 கோடி சம்பளம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 02 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவில் ஹன்ஸ்ராஜ் சக்சேனா தொடங்கவுள்ள புது திரைப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.240 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக இந்திய நாளிதழொன்று வெளியிட்டுள்ள செய்தியால் ஊடகத்துறை பரபரத்துள்ளது.

இந்தியாவிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் ரஜினி நடித்த எந்திரன். அதற்கு முன்பு சிவாஜி, வசூலில் பல சாதனைகளைப் படைத்து இந்திய திரையுலகினரை வியக்க வைத்தது.

இப்போது ரஜினி நடித்துவரும் கோச்சடையான் படம் உலகம் முழுவதும் ஹொலிவூட் படத்துக்கு நிகராக வெளியாகும் நிலையில் உள்ளது.

ரஜினியை வைத்து படமெடுத்தால், அது உலக அளவிலான பெரும் வசூலுக்கு உத்தரவாதம் என்பதால், அவருக்கு எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கேட்டிராத பெரும் தொகையான ரூ 240 கோடியை சம்பளமாகத் தர சக்சேனா முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில், ரஜினியைச் சந்தித்தாராம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. தனக்கு 30 நாட்கள் மட்டும் கால்ஷீட் தந்தால் போதும், ஒரு புதிய மெகா பட்ஜெட் படத்தை உருவாக்கிவிடுவேன் என்று கூறினாராம்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் தெலுங்கின் டாப் நடிகர் ராம்சரண் தேஜாவை நடிக்க வைக்கத் திட்டமாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நேரடியாக வெளியிட்டு, இந்த பெரும் தொகையை வசூலிக்கத் திட்டமாம்.

விஷயத்தைக் கேட்ட ரஜினி, யோசித்துச் சொல்வதாகக் கூறிவிட்டாராம்.
சக்சேனா சொல்லும் கணக்குப்படி பார்த்தால் ரஜினிக்கு ஒரு நாளைக்கு ரூ 8 கோடி சம்பளம். ஹொலிவூட்டில் முதல்நிலை நடிகர்களுக்கு இணையான சம்பளம் இது.

இதுகுறித்து சாக்ஸ் பிக்சர்ஸ் தரப்பில், 'இந்த திட்டம் குறித்து இப்போதே கருத்து சொல்வது சரியல்ல. பேசிக் கொண்டிருக்கிறோம். ரஜினி சார் சரி என்றதும், ராம்சரண் தேஜாவை அணுகப் போகிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • arunkumar Thursday, 10 April 2014 09:48 AM

    சூப்பர்

    Reply : 0       0

    nava Sunday, 11 May 2014 04:14 PM

    இந்த சம்பளம் உண்மையாக ரஜனி சார் வாங்கிறவரா? இதை அவர்தான் கூற வேண்டும்...

    Reply : 0       0

    velu Wednesday, 18 June 2014 05:08 AM

    இந்த சம்பளம் உண்மையாக ரஜனி சார் வாங்கிறவரா? இதை அவர்தான் கூற வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X