2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கமலுக்கு ரூ.30 கோடி நட்டம்...

Menaka Mookandi   / 2013 ஜனவரி 28 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


திட்டமிட்டபடி 'விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாகாததால் அத்திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான கமல்ஹாஸனுக்கு 30 கோடி ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

95 கோடி ரூபா செலவின் கமலஹாசனால் தயாரிக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த 25ஆம் திகதி திட்டமிட்டப்படி திரைக்கு வரவில்லை.

தமிழ்நாட்டில் அந்த திரைப்படத்தை வெளியிட இரண்டு வாரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் அத்திரைப்படம் வெளியானது.

கடந்த 3 நாட்களில் இந்த திரைப்படம் முடக்கம் காரணமாக அனைத்து தரப்பினருக்கும் 30 கோடி ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த தடை நீடித்தால் இழப்பு தொகை மேலும் அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த மல்டி மீடியா நிறுவன விநியோகஸ்தர் ராஜேஸ் தடானி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • apimaani Tuesday, 29 January 2013 03:28 PM

    மிகவும் சந்தோசம். மிகையான ஆசை கூடாது.. இஸ்லாமியரை தீவிரவாதிகளாய் சித்தரிக்கும் வேலையை இத்தோடு விட்டிடனும்.

    Reply : 0       0

    aathankam Sunday, 17 February 2013 10:00 AM

    ஏன் இன்னும் வீம்புத்தனம்...? இது அறிவு சூடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X