2025 மே 19, திங்கட்கிழமை

த்ரிஷாவுக்கு 30...

Menaka Mookandi   / 2013 மே 04 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, தனது 30ஆவது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். பொதுவாக தமிழ் சினிமாவில் நாயகிகளின் ஆயுள் மிகக் குறைவு. அதை மீறி நீண்ட காலம் நாயகிகளாக தாக்குப் பிடித்தவர்கள் மிகவும் குறைவு.

அண்மைக் காலத்திய நாயகிகளில் த்ரிஷா, நயன்தாரா, சினேகா என ஒரு சிலர்தான் பல ஆண்டுகள் ஹீரோயின்களாகவே இருந்து வருகிறார்கள். இன்றைய ஹீரோயின்களில் முதலிடத்தில் உள்ளவர் த்ரிஷா. கிட்டத்தட்ட பத்தாண்டுகளைத் தாண்டி அவர் திரையில் நாயகியாகவே பிரகாசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவைச் சுற்றி எப்போதும் ஓயாத சர்ச்சைகள் உண்டு. நடுரோட்டில் பார்ட்டி, காதல், குளியலறை வீடியோ என ஏகப்பட்ட பரபரப்புகள் கிளம்பினாலும், அவரது மவுசு குறையவில்லை. ஒரு வகையில் இந்த சர்ச்சைகளே அவருக்கு பலமாக அமைந்துவிட்டன.

தமிழ் நடிகைகளிலேயே விலங்குகள் மீது அலாதி அன்பு கொண்டவர் த்ரிஷாதான். கண்ணில் படும் அத்தனை தெரு நாய்களையும் தத்தெடுத்து வளர்க்கிறார். அதேபோல, விலங்கு வதைக்கு எதிரான பெடா அமைப்பின் பிரதிநிதியாகவும் செயல்படுகிறார்.

இந்நிலையில், தனது முப்பதாவது வயதைத் தொடும் த்ரிஷா, தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடுகிறார்.





You May Also Like

  Comments - 0

  • மனிதன் Saturday, 04 May 2013 02:10 PM

    சும்மா மச மசன்னு இருக்கிறா...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X