2025 மே 19, திங்கட்கிழமை

ரூ. 5 கோடிக்கு நகையணிந்து நடிக்கும் அனுஷ்கா...

Menaka Mookandi   / 2013 ஜூலை 02 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


'ராணி ருத்ரம்மா தேவி' திரைப்படத்துக்காக நடிகை அனுஷ்கா ரூ. 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறாராம்.

அருந்ததி திரைப்பட வெற்றிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால திரைப்படம் 'ராணி ருத்ரமாதேவி'. புகழ் (தமிழில் கில்லி) குணசேகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
 
அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவை கவனிக்க, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கில் ஈடபட்டுள்ளார்.  40 கோடி ரூபா பட்ஜெட்டுக்கு மேல் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது 'ராணி ருத்ரமாதேவி'.

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ஜோதா அக்பர்' திரைப்படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்த நீதா லுல்லா என்பவரே ருத்ரம்மா தேவி திரைப்படத்திற்காக அனுஷ்கா அணியும் உடைகளையும், ஆபரணங்களையும் டிசைன் செய்திருக்கிறார்.

தங்கம், வைரம் ஆகியவையுடன் பிரம்மாண்டமாக, அழகாக உடைகளையும், ஆபரணங்களையும் 'ராணி ருத்ரம்மா தேவி' கதாபாத்திரத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்.

அதோடு திரைப்படத்துக்காக அனுஷ்கா கத்தி பிடிக்கவும், வாள் சண்டை போடவும் சிறப்பு பயிற்சி எடுத்து நடித்து வருகிறாராம். 3டியில் படமாக்கப்படும் முதல் சரித்திரத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X