Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் பரத் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார். இரண்டு படங்களில் இப்பொழுது அவர் நடித்து வருகின்றார். 'யுவன் யுவதி' மற்றும் சிம்புவுடன் இணைந்து 'வானம்' ஆகிய படங்களில் இப்பொழுது நடித்து வருகின்றார்.
'போய்ஸ்' படத்தில் அறிமுகமாகி, படிப்படியாக உயர்ந்து, இன்று முன்னணி நடிகர்களின் பட்டியலில் சேர்ந்திருக்கும் பரத்திற்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்வதற்காக தனது அடுத்த படம்பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார் பரத்.
'சொல்லாமலே', 'ரோஜா கூட்டம்', 'டிஸூம்' மற்றும் எல்லோர் மனதினையும் உருகவைத்த 'பூ' போன்ற வெற்றிப்படங்களை தந்த இயக்குநர் சசியின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பரத் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த படத்திற்கு '555' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
அக்ஷன், காதல் நிறைந்த கதையாக இது அமையவிருக்கிறதாம். இப்படத்தின் அறிவிப்பு வெகுவிரைவில் உத்தியோகபூர்வமாக வெளிவருமென தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025