2025 மே 21, புதன்கிழமை

கவிப்பேரரசுக்கு இன்று 57 வயது

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும்,  கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 57வயதைக் கொண்டாடுகிறார்.

சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை தட்டிச்சென்ற இவர், 1980ஆம் ஆண்டு வெளியான "நிழல்கள்" எனும் திரைப்படத்தில் "பொன்மாலை பொழுது" என்ற பாடலை முதன் முதலாக எழுதி அனைவரையும் தன்வசமாக்கினார்.

அன்றுமுதல் இன்றுவரை சுமார் 6ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதி காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றார்.

ஆரம்ப காலத்தில் இசைஞானி இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இணைந்து வழங்கிய இவரது பாடல்கள் அனைவர் மனதிலும் ஓயாத அலையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தனது 57ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடும் கவிப்பேரரசு, "கவிஞர்கள் திருநாள் விருதினை", கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • R.Mohan Wednesday, 14 July 2010 03:51 AM

    வைரமுத்து ஐயா
    கையில் கத்தியில்லை! துப்பாக்கியில்லை!!
    பேனாவை மட்டுமே வைத்துக்கொண்டு
    எப்படி ஐயா அனைத்து தமிழர்களின்
    நெஞ்சங்களிலும் முகாம் அமைத்தீர்கள்!!!

    கவியரசர் கண்ணதாசன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தீர்கள்.
    கவிப்பேரரசுவாக உயர்ந்துவிட்டீர்கள்.
    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து
    முன்தோன்றிய மூத்த தமிழ் இருக்கும்வரை
    உங்கள் பெயரும் நிலைத்திருக்கும் ஐயா.

    நீங்கள் நீடூழி வாழவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .