George / 2017 மே 26 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பர்ஸ்டார் ரஜினியின் புதிய திரைப்படத்தின் பெயர் 'காலா' கரிகாலன் என்று, நேற்றையதினம் முதற்பார்வை போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், இந்தத் திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற 4 நட்சத்திரங்கள் இந்தத் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், நடிகை அஞ்சலி, நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் இணையவுள்ளனர்.
மும்பை தாராவியில் வாழும் ஒரு தமிழனின் வாழ்க்கை கதையில் இத்திரைப்படம் உருவாகவுள்ளதாக இயக்குநர் ரஞ்சித் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு 28ஆம் திகதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ள இத்திரைப்படத்தில் பொலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago