2025 மே 14, புதன்கிழமை

ரன்பீர் - தீபிகா பிரிவுக்கு ஷாகித் கபூர் தான் காரணமாம்

George   / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட் நடிகை கத்ரீனாவிடம் இருந்து, நடிகர் ரன்பீர் கபூரை தட்டிப்பறித்தார் நடிகை தீபிகா படுகோனே.
ஆனால், இப்போது, ரன்பீருக்கும், தீபிகாவுக்கும், 'பிரேக் அப்' ஆகி விட்டதாக பரபரத்து கிடக்கிறது ஹிந்தி திரையுலகம். இவர்களின் பிரிவுக்கு, ஷாகித் கபூர் தான் காரணமாம்.

சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, 'பத்மாவதி' திரைப்படம் தயராகிறது. இதில், ராணி பத்மினியாக தீபிகாவும், அவரது கணவர் ராணா ரவல் ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்பீரும் நடிக்கின்றனர்.

ஆரம்பத்தில், ரன்பீர் சிங்குக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான், காட்சிகள் இடம் பெற்றிருந்ததாம். ஆனால், தீபிகாவின் வற்புறுத்தலால், ஷாகித் கபூருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுடன், தீபீகாவுக்கும், அவருக்கும் இடையே நெருக்கமான காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டதாம். இதனால் கடுப்பான ரன்பீர், தீபிகா பேச்சுக்கு, 'கா' விட்டு விட்டாராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X