2025 மே 19, திங்கட்கிழமை

10 வருட ரகசியம்...

Menaka Mookandi   / 2013 ஜூன் 05 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்திய நடிகை த்ரிஷா, தான் திரையுலகில் 10 ஆண்டுகள் தாக்குப் பிடித்ததன் ரகசியத்தை தெரிவித்துள்ளார். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இன்றும் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது என்று பலரும் வியந்து வருகின்றனர். இந்நிலையில் த்ரிஷா தனது திரையுலக வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

'சினிமாவில் நிலைத்து நிற்க பெரிய பெரிய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் மட்டும் போதாது' என்று த்ரிஷா தெரிவித்துள்ளார். 'பல வகையான கதாபாத்திரங்களில் நடித்தால் தான் திரையுலகில் நீடிக்க முடியும். அப்படி நடித்ததால் தான் இன்றும் தன்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'ஒரே நடிகருடன் மீண்டும் மீண்டும் ஜோடி சேர்ந்தால் ரசிகர்களுக்கு போர் அடித்துவிடும். அதனால் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர வேண்டும். ஆனால் நல்ல கதையாக இருந்தால் அஜீத், விஜய்யுடன் மீண்டும் மீண்டும் நடிக்க தயார்' என்று த்ரிஷா மேலும் கூறியுள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X