2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரூ.200 கோடி வசூலித்த விஸ்வரூபம்!

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


கமல்ஹாசனின் 'விஸ்வரூபம்' திரைப்படம் இந்திய ரூபாப்படி ரூ.200 கோடி பொக்ஸ் ஒபிஸ் ஹிட்டில் இணைந்துள்ளது. கமலின் நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் விஸ்வரூபம். பயங்கரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கமலுடன் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

இத்திரைப்படம் வெளியாவதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதனால் திரைப்படத்தை தடை செய்ய தமிழக அரசு முன்வர, கமல் இந்தியாவை விட்டே வெளியே போவேன் என்று கூறும் அளவுக்கு பிரச்சினை பெரிதாக உருவெடுத்தது.

இறுதியில், பிரச்சினையெல்லாம் ஓய்ந்து, பல தடைகளை கடந்து திரைப்படமும் வெளியானது. இலங்கையிலும் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டியுள்ளதாக அத்திரைப்படத்தின் கதாநாயகி பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின், நியூஜெர்சி நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பூஜா குமார், இதனை தெரிவித்துள்ளார். ரூ.95 கோடியில் உருவான விஸ்வரூபம் திரைப்படம் இப்போது ரூ.200 கோடி வசூல் செய்து இருப்பது கமல் உள்ளிட்ட திரைப்படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்து இருக்கிறது.

அதே மகிழ்ச்சியோடு விஸ்வரூபம் பார்ட்௨ பணிகளை ரொம்ப துரிதமாக செய்து வருகிறார் கமல். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் விஸ்வரூபம்௨-வும் வெளியாகிவிடும் என்று கூறப்படுகிறது.



You May Also Like

  Comments - 0

  • jegan Thursday, 28 February 2013 11:53 AM

    நாங்க இந்த படத்துக்கு எதிராக போர்கொடி தூக்கினோம் படம் சுப்பர் ஹிட்.... அடுத்தது பகுதி 2, 3 எண்டு வந்து கொண்டே இருக்கப் போகுது....

    Reply : 0       0

    appu nihirthan Saturday, 02 March 2013 03:12 AM

    ஜெயலலிதாவுக்கு நன்றி. அவர்தான் இப் படத்துக்கு விளம்பரதாரர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X