2025 மே 21, புதன்கிழமை

விஜய்க்கு சோதனைமேல் சோதனை

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மைக்காலமாக நடிகர் விஜயின் திரைப்படங்கள் வசூல்ரீதியாக பெரியளவில் வெற்றிபெறாததால் தென்னிந்திய திரைப்பட உரிமையாளர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்.

சுறா திரைப்படம் பெரியளவில் தோல்வியடைந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியபோது விஜயின் தந்தை அவர்களை சமாதானப்படுத்தயிருந்தார். ஆனால் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டதாக மீண்டும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.

எதிர்வரும் 13ஆம் திகதி செயற்குழு கூடி ஆராயவுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ரஜினி, மணிரத்தினம் போன்றவர்கள் தங்களுடைய படம் தோல்வியடைந்தால் அதனால் ஏற்படும் நஷ்டத்தினை ஈடுசெய்வதற்கு திரையரங்க உரிமையாளர்களுக்கு உதவிவருகிறார்கள். ஆனால் விஜய் தொடர்ந்தும் தோல்விப்படங்களைக் கொடுத்துக்கொண்டே போவதாகவும் அதற்கு அவர் எந்தவித நஷ்டஈடும் தரவில்லை என்பதாலுமே விஜய் மீது நடவடிக்கை எடுகக் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவுசெய்திருக்கிறதாம்.

பட்டகாலிலேயே படும் என்பார்களே... அதுபோல்தான் விஜய் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்... இனியாவது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் கொஞ்சமாகவது தல தப்பும்...

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .