2025 மே 21, புதன்கிழமை

மன்மதன் அம்பு தீபாவளிக்கு எய்யப்படும்

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்பார்ப்பின் மத்தியில் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகிக் கொண்டிருக்கும் மன்மதன் அம்பு திரைப்படத்தினை தீபாவளி பரிசாக வெளியிட உத்தேசித்திருப்பதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.

கமல்ஹாசன், மாதவன், திரிஷா, சங்கீதா போன்ற பிரபல்யமான நடிகர்களுடன் மற்றும் பல துணை நடிகர்களும் இப்பொழுது ஐரோப்பாவில் ஆடம்பர கப்பலில் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சில சாகச காட்சிகளை படமாக்குவதற்காக பிரான்ஸ், ஸ்பைன் ஆகிய நாடுகளுக்கு புறப்படவிருக்கிறார்கள்.

படப்பிடிப்புகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருவதாகவும் இன்னமும் 40 வீதமான படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருப்பதால் சீக்கிரமே முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நாடுதிரும்ப தயாராகுவதாக மன்மதன் அம்பு குழு தெரிவித்திருக்கிறது. படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் கிரபிக்ஸ் வேலைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. அவை நிறைவடைந்ததும் தீபாவளிக்கு மன்மதன் அம்பு எய்வதற்கு தயாராகிவிடும் என இயக்குநர் அறிவித்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .