2025 மே 21, புதன்கிழமை

தொலைந்துபோன திரிஷா..!

A.P.Mathan   / 2010 ஜூலை 11 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


மன்மதன் அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கமல் - திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆடம்பர சொகுசுக் கப்பலில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது நடிகை திரிஷா திடீரென காணாமல் போய்விட்டாராம்.

சொகுசுக் கப்பல் என்னும்போது பல அடுக்கு மாடிகளைக் கொண்டது. அத்தோடு புடவை, நகைக்கடைகள், பொழுதுபோக்கு இடங்கள் என விஸ்தீரமான ஆடம்பர கப்பலது. படப்பிடிப்பு ஒரு தளத்தில் நடைபெற்று முடிந்ததும் அடுத்த தளத்திற்கு படப்பிடிப்புக் குழுவினர் புறப்பட்டனர். இவ்வேளையில் தனது தாயார் உமாவுடன் திரிஷாவும் சென்று கொண்டிருந்தார். சென்றுகொண்டிருந்த திரிஷா திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த படப்பிடிப்புக் குழுவினர் கப்பல் உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு விடயத்தைத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு மணித்தியால தேடலின் பின்னர் ஷொப்பிங் செய்து கொண்டிருந்த திரிஷாவை அதிகாரிகள் கண்டுபிடித்து படப்பிடிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்திருக்கிறார்களாம். பாவம் திரிஷா, தான் தொலைந்தது தெரியாமல் ஷொப்பிங் செய்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .