2025 மே 21, புதன்கிழமை

சீறிப் பாய்கிறார் சிம்பு..!

A.P.Mathan   / 2010 ஜூலை 21 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

100 நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டு உங்களை படத்திலிருந்து விலக்கியிருக்கிறோம், நீங்கள் வேறு படத்தினைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று லிங்குசாமி சொல்லியதிலிருந்து நடிகர் சிம்பு சினம்கொண்டு அலைகிறாராம்.

 

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தம் செயப்பட்டிருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பின்னர் பூபதிபாண்டியனின் இயக்கத்தில் நடிப்பதற்காக பலநாட்கள் காத்திருந்தார் சிம்பு. அப்படம் தள்ளிப்போகவே லிங்குசாமியிடம் அனுமதிபெற்று வானம் படத்தின் வேலைகளை தொடங்கினார். இதற்கிடையில் தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனத்தின் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கவிருப்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. இப்படியே லிங்குசாமிக்காக காத்திருந்த சிம்பு கடைசிநேரத்தில் அப்படத்திலிருந்து தூக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார் லிங்குசாமி.

இதனால் காண்பவர்களிடம் எல்லாம் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கிறார் சிம்பு. தன்னை காக்க வைத்து தனது காலத்தினை வீணடித்துவிட்டதாக லிங்குசாமி மீது புகார் தெரிவிக்கிறார் சிம்பு. சாண் ஏற முழம் சறுக்கும் என்பது இதுதானோ…


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .