2025 மே 21, புதன்கிழமை

அரசியலுக்கு அடித்தளமிடுகிறார் சிம்பு

A.P.Mathan   / 2010 ஜூலை 22 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிக்கல்களில் அதிகமாக சிக்கித்தவிக்கும் சிலம்பரசன், தனது எதிர்கால அரசியல் பிரவேசத்திற்கு இப்பொழுதே அடித்தளமிடுவதாக தெரிகிறது. தனது தந்தையைப்போல தானும் சகதுறை வல்லவன் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். இருப்பினும் அரசியலில் மாத்திரம் இதுவரை தலைகாட்டவில்லை. ஆகையினால்தான் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்கு இப்பொழுதே சிம்பு தயாராகிவிட்டார்.

சிம்புவின் தந்தையை எல்லோரும் TR என்று அழைப்பர். அதேபாணியில் தனது பெயரினையும் STR என மாற்றி வைத்துள்ளாராம் சிம்பு. இந்த பெயர் மாற்றத்திற்கு மற்றுமொரு கதையும் இருக்கிறது.

வெளிநாட்டில் படப்பிடிப்பிற்கு சென்றவேளை சிம்புவின் இயற்பெயரான 'சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்திரன்' என்பதனைப் பார்த்த விமானநிலைய அதிகாரி, 'உங்களுடைய பெயரினை சுருக்கி STR என மாற்றி வைத்தால் நன்றாக இருக்கும்' என்று கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். வரிசையில் தனது பெயரை ஒப்பிட்டு சொன்ன அதிகாரியைப் பார்த்து மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார் சிம்பு. அதிலிருந்த தனது பெயரை சுருக்கி STR என்று அழைக்குமாறு தனது நெருங்கியவர்களிடம் கூறிவருகிறாராம். அத்தோடு தந்தைபோல் அரசியலிலும் ஈடுபடப்போவதாகவும் தகவல்.


You May Also Like

  Comments - 0

  • ameer Friday, 23 July 2010 01:13 PM

    இன்னுமொரு அரசியல் கோமாளி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .