2025 மே 21, புதன்கிழமை

சண்டைபோட தயாராகிறார் ஜெனிலியா…!

A.P.Mathan   / 2010 ஜூலை 23 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அசினுக்கு முன்னதாக அண்மைக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ஜெனிலியா. ஜஃபா திரைப்பட விருதுவழங்கும் நிகழ்வுக்கு தனது காதலனுடன் இலங்கைக்கு வந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததிலிருந்து அவரது பேச்சுத்தான் ஊடகங்களில் அடிக்கடி அடிபட்டது.

இந்த சூடு சற்று ஓய்ந்த பின்னர் மறுபடியும் சினிமா பற்றிய பேச்சு அடிபடத்தொடங்கியிருக்கிறது. உத்தம புத்திரன் திரைப்படத்தினை முடித்துக்கொடுத்துவிட்ட ஜெனிலியா, மலையாளத்தில் உறுமி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் களரிச் சண்டை நடைபெறுவதுபோல் பல காட்சிகள் இடம்பெறுகிறதாம். கதாநாயகனாக நடிக்கவிருக்கின்ற பிருத்விராஜுக்கும் ஜெனிலியாவுக்கும் களரிச்சண்டை தெரியாதாம். இதனால் இருவரையும் களரிச்சண்டை பழகவிட்டிருக்கிறாராம் இயக்குநர் சந்தோஷ் சிவன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .