Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 23 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலமாக தமிழுக்கு இழுத்துவரப்பட்டவர் அனுயா. மும்பை வரவான இவர் சற்று 'தாராளமாகவே' தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதல் படம் நல்ல பெயரெடுத்திருந்தாலும் அனுயாவுக்கு வாய்ப்புகள் தேடிவரவில்லை. அடுத்தபடமான மதுரை சம்பவம் அனுயாவை முழுமையாகவே மாற்றியிருந்தது. படுக்கையறை காட்சிகளில்கூட தாராளமாகவே நடித்திருந்தார்.
இவரது கவர்ச்சியில் மெய்மறந்த தயாரிப்பாளர்கள், கவர்ச்சி பாத்திரங்களில் நடிக்க வருமாறு கோரிக்கை விட்டிருக்கின்றனர். இந்நிலையில் நஞ்சுபுரம் என்ற படத்தில் ஒரு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். இதனைக் கேள்விப்பட்ட பலர் தங்களது படத்திலும் ஒரு குத்தாட்டம் போடுமாறு தூதனுப்பியிருக்கின்றனர். ஆனால் அனைத்து தூதுகளையும் புறக்கணித்துவிட்டார் அனுயா. நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் கதாநாயகனுமான ராகவ், அனுயாவின் நெருங்கிய தோழராம். அதனால்தான் நஞ்சுபுரத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாரம்.
அதுமட்டுமல்லாமல் அந்தப்பாடல் தொலைக்காட்சி விளம்பரங்களில் மட்டும்தான் ஒளிபரப்பாகுமாம். திரைப்படத்தில் அந்தப் பாடல் சேர்க்கப்படாதாம். அனுயா தற்பொழுது சுந்தர் சியுடன் 'நகரம் மறுபக்கம்' படத்தில் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago