2025 மே 21, புதன்கிழமை

விஜய்க்கு ஜோடி ஆகிறார் காஜல் அகர்வால்

A.P.Mathan   / 2010 ஜூலை 24 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விஜய் தற்பொழுது வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சிம்புவுடன் முரண்பட்ட லிங்குசாமி தற்பொழுது விஜயுடன் இணைகிறார்.

தொடர் தோல்விகளால் பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்துவரும் விஜய், தற்பொழுதெல்லாம் நல்ல கதைக்களங்களை தேடிக்கொண்டிருக்கிறார். ஆகையினால்தான் லிங்குசாமியின் படத்திற்கும் ஓகே சொல்லியிருக்கிறார். கதாநாயகன் தயாராக இருக்கிறார். கதாநாயகியாக யாரைப் போடலாம் என தேடியபொழுது காஜல் அகல்வாலை விஜய் சிபாரிசு செய்திருக்கிறார். ஏற்கனவே வேலாயுதத்தில் இவரை நடிக்க கேட்டபொழுது திகதி ஒத்துவராததால் தவிர்த்துக்கொண்டார் காஜல். இப்பொழுது மீண்டும் விஜயிடம் சிக்கிவிட்டார் காஜல்.

லிங்குசாமியோடு விஜய் இணையும் இத்திரைப்படம் நவம்பர் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. தைப்பொங்கல் அல்லது காதலர் தினத்தில் இத்திரைப்படத்தினை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள். பையா என்ற வெற்றிப்படத்தினை வழங்கிய நைன் கிளவுட் நிறுவனமே இந்தப் படத்தினையும் தயாரிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .