2025 மே 21, புதன்கிழமை

முதன்முதலாக விளம்பரப் படத்தில் ஷாருக்கானின் மனைவி

A.P.Mathan   / 2010 ஜூலை 24 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவூட் சூப்பர் ஹீரோ ஷாருக்கானின் மனைவி கௌரி கான் அநேகமாக கமெராவின் முன் தோன்றுவது அரிது. திரைக்குப் பின்னால் இருந்துதான் இவ்வளவு நாளும் திரையுலகோடு தொடர்புபட்டிருந்தார். ஷாருக்கானின் 'பாஷிஹார்' படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக கடமையாற்றியிருக்கிறார். அத்தோடு 'மெய்ஹூன் நா' மற்றும் 'ஓம் ஷாந்தி ஓம்' ஆகிய படங்களின் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஆனால் படங்களில் தலைகாட்டுவதில்லை.

முதன் முறையாக ஷாருக்கானுடன் இணைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடிக்கவிருக்கிறார் கௌரிகான். சுன்ஹில் ஸிப்பியின் இயக்கத்தில் உருவாகும் ஒரு விளம்பரப்படத்திலேயே ஷாருக்கான் தம்பதிகள் நடிக்கவிருக்கிறார்கள்.

ஏனைய பொலிவூட் நடிகர்கள் பலர், தம்பதிகளாக நடித்திருக்கிறார்கள். இப்பொழுது அவர்களின் வரிசையில் ஷாருக்கான் தம்பதிகளும் இணைந்துகொள்கிறார்கள். இந்த விளம்பரம் இன்னும் சில நாட்களில் தயாராகிவிடும் என தெரிவிக்கப்படுகிறது.


 


You May Also Like

  Comments - 0

  • Sharmila and Gowri Saturday, 14 August 2010 07:41 AM

    வெரி நிசே டு சி! மே கோட் ப்ளேசஸ் யு அண்ட் யூர்ஸ் நொவ் அண்ட் அல்வய்ஸ்!!!!!!!
    துபாய் ரேசிதேன்த்ஸ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .