Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 26 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக சினிமா சரித்திரத்தில் 'ஸ்பைடர் மான்' திரைப்படத்தின் பின்னர் அதிக திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டிருக்கும் திரைப்படம் எந்திரன். பிரமாண்ட கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் யாவும் நிறைவடைந்துவிட்டன. இப்பொழுது படப்பிடிப்புக்கு பிற்பட்ட வேலைகளில் எந்திரன் குழு மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் எந்திரன் திரைப்படத்தின் பாடல்கள் எதிர்வரும் 31ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரில் வெளியிடப்படவிருக்கின்றன.
எந்திரன் படத்திற்கு இருக்கின்ற எதிர்பார்ப்பினைப்போலவே பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஒஸ்கார் விருதுவென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் இப்பாடல்களின் வெளியீட்டுவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடாகியிருக்கிறது.
இந்நிகழ்வில் சிம்புவின் நடனம் விஷேட இடம்பிடித்திருக்கிறதாம். படப்பிடிப்பு வேலைகளில் லண்டனில் இருக்கும் சிம்பு, எந்திரன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு நடன விருந்தினை வழங்குவார் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.
fanaa Tuesday, 27 July 2010 02:17 AM
சிம்புவுக்கு வேற வேலையே இல்லையா ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago