2025 மே 21, புதன்கிழமை

கௌதம் மேனனை விரும்பும் சமீரா ரெட்டி

A.P.Mathan   / 2010 ஜூலை 26 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கௌதம் மேனன் சொந்தமாகத் தயாரிக்கும் படம் நடுநிசி நாய்கள். பொதுவாக கௌதம் மேனன் என்றாலே எதிர்பார்ப்புகள் நிறைந்துதான் காணப்படும். அதேபோல் நடுநிசி நாய்களுக்கும் இப்பொழுதே எதிர்பார்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.
 
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருப்பவர் சமீரா ரெட்டி. ஹிந்தி திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம்வந்த சமீராவை, வாரணம் ஆயிரம் படத்தில் அழகிய தேவதையாகக் காட்டியவர் கௌதம் மேனன். இதனால் கௌதம் மேனன் மீது தீராத அன்பில் இருக்கிறார் அவர்.

நடுநிசி நாய்கள் படத்தின் நாயகியாக நடிக்கவிருப்பது பற்றி சமீரா ரெட்டி குறிப்பிடுகையில்… எனக்கு ரொம்ப பிடித்த படம் காக்க காக்க. அந்த படத்தினை இயக்கிய கௌதம் மேனனை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். என் மனதினை வென்ற இயக்குநர் அவர். அப்படிப்பட்ட என் அன்புக்குரியவர், தனது வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். அந்தப் படம் எனக்கு நல்ல பெயரினை வாங்கித்தந்தது. அதேபோல் வித்தியாசமான சமீரா ரெட்டியை நடுநிசி நாய்களில் காண்பீர்கள். கௌதம் மேனன் படத்தில் மறுபடியும் நடிக்கக் கிடைத்தது அளவில்லா மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

கௌதம் மேனன்போல் நல்ல கதையுள்ள படங்களை இயக்குகின்றவர்களின் படங்களில் மாத்திரம் இனிமேல் நடிப்பதென்ற உறுதியில் இருக்கின்றார் சமீரா ரெட்டி.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .