Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 27 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் சில பிரச்சினைகளை தீர்த்தவள் நான். ஆகையினால் நான் யாருக்கும் அடிபணிந்து போகவேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்திய அரசியல் சட்டத்தினையும் நடிகர் சங்கத்தின் கட்டளைகளையும் நான் இதுவரை மீறி நடக்கவில்லை, நடக்கவும் மாட்டேன். இதையும்மீறி நடிகர் சங்கம் எனக்கு தடைவிதித்தால் விதித்திட்டுப் போகட்டும். அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை என நடிகை அசின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கூட்டத்தில் நடிகை அசினை தாறுமாறாக விமர்சித்திருந்தார்கள் நடிகர்களான ராதாரவியும் சத்தியராஜும். இவர்களின் கண்டனத்திற்கு பதிலளிக்குமுகமாகவே அசில் இவ்வாறு ஆவேசப்பட்டிருக்கிறார்.
கொழும்பில் நான் இருக்கும்போது பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அதனால் அரசாங்கத்திடம் அனுமதி கோரினேன். கொழும்பில் வெளிநாட்டவர்கள் இப்படியான இடங்களுக்கு செல்வதற்கு கண்டிப்பாக அரசாங்க அனுமதி தேவை. ஆகையினால்தான் அரசாங்கத்திடம் கேட்டேன். அப்பொழுதுதான் ஜனாதிபதியின் பாரியாரும் என்னுடன் வருகிறேன் என்று கூறினார். அவர் அப்படி சொல்லும்போது என்னால் எப்படி மறுக்கமுடியும். ஆனபடியால்தான் என்னுடன் ஜனாதிபதியின் பாரியாரும் வந்தார் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார் அசின்.
அசினின் பிரச்சினைக்கு எப்பொழுது முடிவு வருமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
fanaa Wednesday, 28 July 2010 01:22 AM
பாவம்டா விட்டுடுங்க.
Reply : 0 0
Fathima Wednesday, 28 July 2010 10:28 PM
அசின் அக்கா எதிர்காலத்துல அரசியலில் குதித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை !
Reply : 0 0
Hijaz Thursday, 29 July 2010 05:29 AM
அசினின் தைரியத்தை கட்டாயம் பாராட்ட வேண்டும்.
Reply : 0 0
shafi Thursday, 26 August 2010 02:09 PM
அசின் உங்களுக்கு ஏன் வீம்பா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 minute ago
24 minute ago
59 minute ago