2025 மே 21, புதன்கிழமை

ஹிந்தியில் விண்ணைத் தாண்டி வருவாயா

A.P.Mathan   / 2010 ஜூலை 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகி வெற்றிபெற்ற விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தினை ஹிந்தியில் இயக்கத் தொடங்கியிருக்கிறார் கௌதம். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது விண்ணைத் தாண்டி வருவாயா. ஆகையினால் இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் வேலைகள் இன்றுமுதல் தொடங்கவிருக்கின்றன.

ஆர்.எஸ். இன்போன்டெய்ன்மென்ட் மற்றும் கெளதம் மேனனின் போட்டான் பெக்டரி இணைந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றன.

ஹிந்திப் படத்தில் சிம்பு வேடத்தில் பிரதிக் பாபர் நடிக்கிறார். இவர் பிரபலமான முன்னாள் கதாநாயகன் ராஜ் பாபரின் மகன் ஆவார். கதாநாயகியாக திரிஷாவே நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். அண்டனி எடிட்டிங்கைக் கவனிக்கிறார். ராஜீவன் கலை, ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார் மனோஜ் பரமஹம்சா.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .