2025 மே 21, புதன்கிழமை

கிச்சு கிச்சு மூட்டாதிங்க – நடிகை சஷான் பதம்சீ

A.P.Mathan   / 2010 ஜூலை 29 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் 'ரொக்கட் சிங்' படத்தில் கலக்கிய சஷான் பதம்சீ, தமிழில் 'கனிமொழி' படத்தில் மூலமாக காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

ஜெய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் சஷான், இயல்பில் கூச்சசுபாவம் அதிகமானவராம். எவராவது கிட்டவந்தாலே கிச்சுகிச்சு மூட்டாதிங்க என்று கெஞ்சுவாராம். அப்படிப்பட்டவர் எப்படி சினிமாவில் நடிக்கத்தொடங்கினார் என்பது சஷானுக்கே புரியவில்லையாம்.

'கனிமொழி' படத்தில் நடிப்பது பற்றி மிகவும் பூரிப்பாக பதிலளிக்கிறார் சஷான். தமிழ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். குறிப்பாக தமிழ் படம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். கனிமொழி அருமையான கதையம்சமுள்ள தமிழ் படம். முதல் படமே எனக்கு பிடித்திருக்கிறது.

நடிகர் ஜெய் ரொம்ப கலகலப்பானவர். அவருடன் சேர்ந்து படப்பிடிப்பிலுள்ளவர்களை கலகலப்பாக வைத்திருந்தோம். நாங்கள் இருவரும் பண்ணின கலாட்டாவினை இன்னும் எங்களால் மறக்கமுடியவில்லை. இயல்பில் கூச்சசுபாவமுடைய நான் எப்படி இப்படி மாறினேன் என்று எனக்கே தெரியவில்லை. விரைவில் 'கனிமொழி' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதில் குடிகொள்வேன் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

பிரபல நாடகக் கலைஞர் ஆலிக் பதம்சீயின் மகள்தான் சஷான் பதம்சீ என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .