Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஜூலை 29 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏற்கனவே பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் விஜய்க்கு மற்றுமொரு சிக்கல் வந்திருக்கிறது. அந்தப் பிரச்சினை அசினின் வடிவத்தில் இப்பொழுது வந்திருக்கிறது.
நான் யாருக்கும் அடிபணியவும் மாட்டேன் மன்னிப்புக் கேட்கவும் மாட்டேன் என வீராப்பாகப் பேசிய அசினின் திரைப்படங்களை புறக்கணிப்போமென உலகின் பல பாகங்களிலிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்நிலையில் அசினுடன் விஜய் ஜோடி சேர்ந்து நடித்துவரும் காவல்காதல் திரைப்படத்தின் நிலையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
தென்னிந்திய திரைப்படங்களின் பணம் சம்பாதிக்கும் வெளிநாடுகளான மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் தமிழ் அமைப்புகள் அசின் நடிக்கும் திரைப்படங்களை புறக்கணிக்கப் போவதாக அறிவிந்திருக்கின்றன. இந்நிலையில் பல பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடும் விஜயின் காவல்காதல் திரைப்படத்தின் நிலை என்னாகுமோ என்ற பயத்தில் விஜயும் தயாரிப்பாளரும் இருக்கின்றனர்.
இந்நிலையில் தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறவில்லை என அசின் பல்டி அடித்திருக்கிறார். எது எப்படியிருப்பினும் இன்று வியாழக்கிழமை தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் அசினின் விவகாரம் முக்கிய இடம்வகிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
Sharmila and Gowri Saturday, 14 August 2010 07:38 AM
வெள் டன்!!!!!!!!
Reply : 0 0
shafi Thursday, 26 August 2010 02:04 PM
விஜய் ட்ரை & ட்ரை. கோட் வில் கிவ் யு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
28 minute ago
1 hours ago