2025 மே 21, புதன்கிழமை

தமிழ் திரையுலகின் ஆங்கிலப்படம் எந்திரன்: ரஜனிகாந்த்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 02 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எந்திரன் திரைப்படம் நிச்சயமாக சாதிக்கும். ஷங்கரின் பிரமாண்ட படம் என்பதாலோ ஐவர்யா என்னுடன் இணைந்து நடிப்பதாலோ ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதாலோ அல்ல. தமிழிலிருந்து உருவாகும் ஹொலிவூட் படம் என்பதாக எந்திரன் பிரபல்யமடையும் என அப்படத்தின் இசை வெளியீட்டின்போது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்தார்.

கடந்த 31ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டின்போதே ரஜனிகாந்த் மேற்படி குறிப்பிட்டார். இந்நிகழ்வில் இந்திய திரையுலகின் பெரும்புள்ளிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து அந்நிகழ்வில் பேசிய ரஜனி… கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளினார். எந்தவொரு தயாரிப்பாளரும் செய்யத்தயங்கும் பரிட்சார்த்த முயற்சியை எங்களை நம்பி கலாநிதி மாறன் செய்திருக்கிறார் என்றார். அதுமட்டுமல்லாமல் அனைவரது எதிர்பார்ப்பினையும் போலவே நிச்சயமாக எந்திரன் புதிய சரித்திரம் படைப்பான் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் இரண்டு நாட்களிலேயே மிகவும் பிரபல்யமாகியிருப்பதும் அல்பம் விற்பனையில் புதிய சாதனை படைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .