Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஞ்ஞானத்தை தழுவிய பல படங்கள் இந்தியாவில் வெளிவந்திருந்தாலும் முழுக்க முழுக்க விஞ்ஞானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் முதல் படம் எந்திரன் ஒன்றே என உறுதியாகக் கூறுகிறேன் என்று, மும்பையில் நடைபெற்ற எந்திரன் (ரோபோ) பாடல்களின் வெளியீட்டு விழாவில் ரஜனி குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பிரம்மாண்டமான ரீதியில் எந்திரன் பாடல்களை ஹிந்தியில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமிர்தாப் பச்சன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பாடல்கள் வெளியீட்டு விழாவில் தொடர்ந்து பேசிய ரஜனி…
'அமிர்தாப் பச்சன் எனக்கு நல்ல நண்பர் மட்டுமல்ல, நல்ல குருவும்கூட. அவருடன் சேர்ந்து பல படங்களை ஹிந்தியில் பண்ணியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சினிமாவின் நுட்பங்களை எனக்குச் சொல்லித்தந்த குரு அமிர்தாப் பச்சன்தான். என் வாழ்நாளில் சில முடிவுகளை எடுக்கும்போது ஆலோசனை கேட்கும் முதல் நபர் அமிர்தாப் பச்சன்தான்' என்று அமிர்தாப் பச்சன் பற்றி புகழ்ந்து பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த்.
நிகழ்ச்சி நிறைவில் நிருபர்களிடம் பேசிய அமிர்தாப் பச்சன்… 'இந்த மண்ணின் உண்மையான மைந்தன் ரஜனிதான். ஒரு நாட்டின் குடிமகனுக்குரிய அத்தனை தன்மைகளும் ரஜனிக்கு இருக்கிறது. ரஜனி நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனம் படைத்த சிறந்த நண்பரும்கூட' என்று ரஜனியை புகழ்ந்து பேசினார்.
இந்நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில் ‘எந்திரன் ஒரு தமிழ் படமோ ஹிந்திப்படமோ அல்ல. இது ஒரு இந்திய படம். இந்திய படைப்பாற்றலை உலகுக்கு பறைசாற்றும் படம்’ என்று பெருமையாக குறிப்பிட்டார்.
இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 160 கோடியில் உருவாகும் எந்திரன் திரைப்படம் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Pix: AFP
Riyaz Tuesday, 31 August 2010 01:13 PM
மித நல்ல செய்திகளை படிக்கக்கூடியதாக உள்ளது. உண்மையிலே அனைத்தும். சினிமா மட்டும் அல்ல, ஏனைய அனைத்து செய்திகளும் சுப்பர். கீப் இட் அப்
Reply : 0 0
raffik Thursday, 24 March 2011 05:10 PM
தலைவரின் அடுத்த படத்திற்காக நங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
8 minute ago
27 minute ago
1 hours ago