2025 மே 21, புதன்கிழமை

நமீதாவுக்கு போட்டியாக லஸ்யா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'வீராசாமி' படத்தில் வில்லியாக அறிமுகமாகிய லஸ்யா, நமீதாவுக்கு வில்லியாக மாறிவிடுவார் போலிருக்கிறது. சில சிக்கல்களினால் திரையுலகிலிருந்து ஒதுங்கியிருந்த லஸ்யா, மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். 'முனி' படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனாவில் பழிவாங்கும் ரத்தக் காட்டேறி வேடத்தில் நடித்துவருகிறார் இவர். இப்படத்தில் லஸ்யாவின் அக்காவாக ரம்யாகிருஷ்ணன் நடிக்கின்றமை சிறப்பானதாகும்.

இப்படத்திற்கு முன்பாக 'புழல்' என்னும் படத்தில் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வந்திருக்கிறாராம். கொஞ்சம் தாராளமாகவே நடித்திருப்பதால் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்க்கிறார் லஸ்யா. அதுமட்டுமல்லாமல் புழல் படத்தில் காட்டிய கவச்சியின் பயனாக அப்படத்தினை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்திலும் நடிக்கின்றாராம் லஸ்யா. இப்படத்தில் அவரைவிட வயதுகுறைந்த பையனை காதலிக்கும் வேடத்தில் ரொம்ப கவர்ச்சியாக நடிக்கிறாராம்.

இதில் என்ன விசேடமென்றால் லஸ்யாவுக்கு பிடித்த நடிகை நமீதாவாம். நமீதாவின் கவர்ச்சியை பின்பற்றித்தான் லஸ்யா கவர்ச்சி காட்டுகிறாராம். லஸ்யா போறா போக்கைப் பார்த்தால் நமீதாவுக்கு ஆப்புத்தான் போலிருக்கு.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .