2025 மே 21, புதன்கிழமை

என் உடம்பைவிட நடிப்புதான் ஞாபகம் வரவேண்டும்: மேக்னா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குட்டி நயன்தாரா போலிருக்கும் மேக்னா, முதன் முதலாக அறிமுகமாகிய திரைப்படம் 'காதல் சொல்ல வந்தேன்'. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் குடிகொண்டுவிட்டார் அவர். இப்பொழுது 'கிருஷ்ண லீலை' என்னும் படத்தில் நடித்துவருகிறார்.

நயன்தாரா மாதிரி இருக்கிறீர்கள் என உசுப்பேற்றி விட்டாலும் நயன்தாராவை மாதிரி கவர்ச்சி காட்டமாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறாராம் மேக்னா. கதைக்கு தகுந்த மாதிரி நிச்சயமாக கவர்ச்சியாக நடிப்பேன். ஆனால் எதற்கும் அளவு இருக்கிறதல்லவா… அந்தவகையில் எல்லை மீறாமல் கவர்ச்சி காட்டவே நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ள மேக்னா, இன்னுமொரு கருத்தினையும் உருக்கமாக சொல்லியிருக்கிறார். என்னுடைய நடிப்பினைத்தான் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். என்னுடைய உடல் அவர்களுக்கு நினைவு வரக்கூடாது. அதுதான் என்னுடைய நடிப்புக்குக் கிடைத்த வெற்றியாக அமையும் என்கிறார் அவர்.


You May Also Like

  Comments - 0

  • R.A.Prasadh Thursday, 26 August 2010 11:46 AM

    சூப்பர்

    Reply : 0       0

    Sooriyan Thursday, 26 August 2010 02:07 PM

    எல்லோரும் முதலில் இப்படிச் சொல்லித்தான் துறைக்கு வருவார்கள். வந்த பின் போட்டி மற்றும் பண ஆசையில் 2 துண்டில் கூட நாடிப்பர்களாம் ..... இவர்கள் .... கதை எல்லாம் வேண்டாம் மேக்னா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .