2025 மே 21, புதன்கிழமை

ஜீவாவின் வந்தான் வென்றான்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிய இடைவெளிக்குப் பின்னர் ஜீவாவின் படத்திற்கு இன்று சனிக்கிழமை பூஜை போடப்பட்டிருக்கிறது. ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை போன்ற இரண்டு வெற்றிப்படங்களை தந்த ஆர்.கண்ணனின் மூன்றாவது படமாக உருவாகிறது வந்தான் வென்றான்.

கண்ணனின் குருவாகிய இயக்குநர் மணிரத்தினம் தானாவே நேரில் வந்து இப்படத்தின் தொடக்க விழாவினை சிறப்பித்திருக்கிறார். ''என்னுடைய நண்பரும் உதவி இயக்குநராக இருந்தவருமான கண்ணன், தொடர்ச்சியாக இரண்டு வெற்றிப்படங்களை தந்திருக்கிறார். நிச்சயமாக வந்தான் வென்றான் படமும் வெற்றிபெறும். இவரது வளர்ச்சியைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது'' என உளமார வாழ்த்தியிருக்கிறார் இயக்குநர் மணிரத்தினம்.

வாசன் விஸூவல்ஸ் வென்ஸர்ஸின் தயாரிப்பில் உருவாகும் 'வந்தான் வென்றான்' திரைப்படத்தின்  கதாநாயகனான ஜீவா, கால்பந்தாட்ட வீரராகவும் மென்பொருள் பொறியியலாளராகவும் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்கும் தபஸி, பொறியியலாளராக நடிக்கிறார். எஸ்.தமான் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

மும்பாயினையும் சென்னையினையும் தளமாகக் கொண்டு உருவாகும் 'வந்தான் வென்றான்' படத்திற்கு வசனம் எழுதுகின்றார் பட்டுக்கோட்டை பிரபாகர். ''வித்தியாசமான போராட்டத்தின் மத்தியில் உருவாகும் காதல்கதை வந்தான் வென்றான்'' என்கிறார் இயக்குநர் கண்ணன்.
இப்படம் ஜீவாவுக்கும் கண்ணனுக்கும் பெரு வெற்றிப்படமாக அமையுமென அனைவரும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இயக்குநர் கண்ணனுக்கு இப்படம் 'ஹெட்றிக்' வெற்றியைக் கொடுக்கும் என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வாழ்த்துக் கூறியிருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .