2025 மே 21, புதன்கிழமை

ராம்கோபால் வர்மா படத்தில் ஸ்ரீதேவி

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒருகாலத்தில் சினி உலகினையே கலக்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவி இப்பொழுது குழந்தை, குடும்பமென சினித்துறையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அப்படி ஒதுங்கியிருந்தவரை தெலுங்கு சினி உலகிற்கு அழைத்து வந்திருக்கிறார் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா.

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, 12 வருடங்களின் பின் தெலுங்கில் நேரடியாக இயக்கும் படம் 'கதா'. தெலுங்கின் பிரபல நகைச்சுவை நடிகர் சுனில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா அண்மையில் ஹைதராபாத்திலுள்ள அன்னபூர்னா கலையகத்தில் நடைபெற்றது. ராம்கோபால் வர்மாவின் நீண்டநாள் நண்பர்களாகிய ஸ்ரீதேவியும் அவரது கணவர் போனி கபூரும் சிறப்பதிதிகளாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீதேவி… ‘தெலுங்கு திரையுலக நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த ராமுக்கு எனது நன்றிகள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நான் தெலுங்கு திரையுலக நண்பர்களை சந்திக்கிறேன். நாகர்ஜுனுடன் நான் நடித்த பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன். அது ஒரு பசுமையான நினைவு. ராம்கோபால் வர்மா ஒரு சிறந்த இயக்குநர். அவருடைய படங்கள் நிச்சயமாக நூறுநாட்களை தாண்டி ஓடும். அந்தவகையில் இந்தப்படமும் வெற்றிபெறும். இப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில் என்னுடைய கணவருடன் மீண்டும் இங்கு வந்து கலந்துகொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .