2025 மே 21, புதன்கிழமை

'எல்லாப் புகழும் மேனனுக்கே' - சமந்தா

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

நான் கெளதம் மேனனின் பரம ரசிகை. அவர் என்னை மூன்று முறை தனது அலுவலகத்திற்கு அழைத்தார்.  ரசிகை என்ற முறையில் சென்றேன். அதன் பின்னரே "விண்ணைத் தாண்டி வருவாயா" தெலுங்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பாணா காத்தாடியில் தனி நாயகியாக அழகு காட்டியிருப்பவர் சமந்தா. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்குப் பதிப்பில் சமந்தாதான், ஜெஸி வேடத்தில் கலக்கியவர்.

தமிழில் திரிஷாவுக்குக் கிடைத்த பெயரும், புகழும், தெலுங்கில் தற்போது ஜெஸி கதாபாத்திரம் மூலம் சமந்தாவுக்கும் கிடைத்துள்ளது. ரசிகர்கள் எங்கு போனாலும் ஜெஸி, ஜெஸி என்றே அழைக்கிறார்களாம். எல்லாப் புகழும் மேனனுக்கே என்று நன்றி கூறுகிறார் சமந்தா.

சரி வாய்ப்பு வந்தது எப்படி என்று கேட்டபோது, "நான் கெளதம் மேனனின் ரசிகை. அவரது அலுவலகத்திலிருந்து மூன்று முறை அழைத்துவிட்டார்கள். நானும் ரசிகை என்ற முறையில் போனேன். அங்கு போன பிறகுதான் விண்ணைத் தாண்டி வருவாயா படக் கதையைக் கூறி நடிக்கிறாயா என்று கேட்டார் மேனன். கசக்குமா என்ன, உடனே ஒத்துக் கொண்டேன் என்கிறார் புன்னகையுடன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்கு முதலில் சமந்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனராம். ஆனாலும் சமந்தா நடித்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டு பின்னர் தொடர்ந்து நடிக்க ஒப்புக் கொண்டனராம்.

இடையில் மங்காத்தா படத்தில் நடிக்க வைக்க சமந்தாவைத்தான் கெளதம் மேனன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் மேனனையே அப்படத்திலிருந்து தூக்கி விட்டதால், கூடவே சமந்தாவையும் அப்புறப்படுத்திக் கொண்டு போய் விட்டார் மேனன்.

இப்போதைக்கு தெலுங்கிலேயே இருந்துவிட முடிவு செய்துள்ளாராம் சமந்தா. இப்போது தெலுங்கில்தான் நிறைய கதை கேட்டு வருகிறேன். நல்ல கதையாக இருந்தா சொல்லுங்க தமிழிலும் நடிக்கிறேன் என்கிறார் சமந்தா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .