2025 மே 21, புதன்கிழமை

சேலைக்கு மாறிய ஸ்ருதி

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தகப்பன் ஆறடி பாய்ந்தால் பிள்ளை அதைவிட பாய்வதுதானே தந்தைக்கு காட்டும் நன்றி. திரையுலகில்' சகலகலா வல்லவன்' என எல்லோராலும் அழைக்கப்படுகின்ற நடிகர் என்றால் அது கமல்ஹாசன்தான். இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. தன் துறைக்கு தேவையான அனைத்தையும் கற்று வைத்திருக்கிறார் கமல்.

அந்தவகையில் தனது மகள் ஸ்ருதியையும் தன்னைப்போலவே எல்லா துறைகளிலும் வல்லவராக வளர்த்திருக்கிறார் கமல். ஹிந்தி திரையுலகில் ‘லக்’ என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிய ஸ்ருதி, இப்போது ஏ.ஆர்.முருகதாஸின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் சூர்யாவுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிப்பதோடு இசையமைப்பது, பாடுவது மற்றும் தொழில்நுட்ப விடயங்களையும் கற்று வைத்திருக்கிறார் அவர்.

இந்தவகையில் தன்னால் அழகாக ‘மொடலிங்’ செய்ய முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார் ஸ்ருதி. மும்பையில் நடைபெற்ற ஆடை அலங்கார பெஷன் ஷோவில் அழகிய நீல வர்ண சாறியுடன் அழகிய ‘ராம்வோர்க்’ போட்டியிருக்கிறார் ஸ்ருதி. சாறி கட்டி எப்படி இவ்வளவு அழகாக நடக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு…

‘இந்த சாறி மிகவும் மென்மையாக இருக்கிறது. ஆகையினால் நடப்பதற்கும் இலகுவாக இருந்தது. அதைவிட சாறி என்பது எமது பாரம்பரியம்…’ என்று கூறி அசத்தியிருக்கும் ஸ்ருதி ஹாசன் உண்மையிலேயே ஒரு சகலகலா வல்லவிதான்.


You May Also Like

  Comments - 0

  • ishrath muhammad Friday, 24 September 2010 10:25 AM

    புலிக்கு பிறந்தது பூனை ஆஹுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .