2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புலம்புகிறார் பூஜா...

Menaka Mookandi   / 2012 மே 09 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


'நான் கடவுள்' திரைப்படத்துக்குப் பின்னர் திரையுலகிலிருந்து காணாமல் போயிருந்த நடிகை பூஜா, நீண்ட இடைவெளிக்கும் பின்னர் சென்னையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் இணைந்து பணியாற்றுகின்றார் என்றும்  திருமணத்துக்கான ஆயத்தங்களில் பூஜா இறங்கிவிட்டார் என்றும் பல்வேறு வதந்திகளும் வெளியான நிலையிலேயே அவர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார்.

இன்னொருபுறம், பாலா இயக்கும் 'பரதேசி' திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஒப்பந்தமானார். இதை உறுதிப்படுத்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார் பூஜா. ஆனால் திடீரென தன்ஷிகாவை கதாநாயகியாக்கியுள்ளார் பாலா. பூஜாவின் நேர ஒதுக்கீட்டு பிரச்சினை காரணமாகவே நடிகையை மாற்றிவிட்டதாக பாலா கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான பூஜா, புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பூஜா, 'பாலா என்னை தன் புதிய படத்தில் நடிக்க தேர்வு செய்தபோது என்னுடைய கதாபாத்திரத்துக்கு தேசிய அளவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தேன். இதனால் அந்த திரைப்படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன்.

ஆனால் நேர ஒதுக்கீட்டுப் பிரச்சினையால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எவ்வாறாயினும் நல்ல வாய்ப்பு பறிபோய்விட்டது. பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்தேன். ஏமாற்றமாகிவிட்டது' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X