2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சினேகாவுக்கு இருமுறை தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் பிரசன்னா

Menaka Mookandi   / 2012 மே 11 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ்த் திரையுலகின் காதல் ஜோடியாக வலம் வந்த பிரசன்னா – சினேகாவின் திருமணம் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருமணத்தின் போது சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி சினேகாவை தன் மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா.

நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர். நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பெலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.

இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடபெற்றன.

முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.

திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி.வாசு, நாசர், நடிகைகள் கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.








You May Also Like

  Comments - 0

  • mohamed Saturday, 12 May 2012 12:26 PM

    i wsh u all da best...i like u sneha madam.

    ...from srilanka bye da

    Reply : 0       0

    Nabeel Sunday, 03 June 2012 10:58 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X