2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா

Menaka Mookandi   / 2012 மே 15 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இனி ஆணின் துணை அவசியம் என்ற நிலை இல்லை. பொருளாதார கஷ்டம் நீங்கிவிட்டது, என் தோற்றமும் புதுப் பொலிவுக்கு வந்துவிட்டது, சினிமாவில் புதிய உயரத்துக்குப் போவேன், என்று பேட்டியளித்துள்ளார் நடிகை நயன்தாரா.

அந்த பேட்டியில் அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது,

'சினிமாவுக்கு வந்தது என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் நான் இவ்வளவு உழைத்திருக்கவோ, அதில் பல நல்ல காரியங்கள் செய்யவோ முடியாமல் போயிருக்கும்.

இப்போது ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய அனுபவமாய் உள்ளது. நானும் தவறுகள் செய்துவிட்டேன். தவறுகளிலிருந்துதானே பாடம் கற்கிறோம். நான் கற்ற பாடங்கள் என்னை மேம்பட்ட வாழ்க்கைக்கு தூண்டியுள்ளன.

முன்பெல்லாம் பெண்கள் சிறு விஷயங்களுக்கு கூட ஆண்களை சார்ந்தே இருந்தனர். அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு கூட வீட்டில் உள்ள ஆண்களையே நம்பி வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளனர். ஆண்களை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. சொந்தமாக முடிவெடுக்க முடிகிறது. அந்த மாறுதல்களை என் சொந்த வாழ்க்கையிலேயே நான் உணர்ந்திருக்கிறேன். இப்போது சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறேன்' என்று கூறியுள்ளார் நயன்தாரா.




You May Also Like

  Comments - 0

  • ramm Tuesday, 15 May 2012 01:29 PM

    ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை - நயன்தாரா 'தெளிவு' # நயன் மதுரை ஆதீனம் பக்கம் போனீங்களோ..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X