2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அஜீத் பாணியில் விஷால்...

Menaka Mookandi   / 2012 மே 16 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி என்று தமிழ் சினிமா நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது.

அந்த வகையில் விஷாலுக்கு வைக்கப்பட்ட அடைமொழி புரட்சித் தளபதி. ஆண்மையில் வெளியிடப்பட்டு பெட்டிக்குள் போன அவரது திரைப்படங்கள் அனைத்திலும் இந்த புரட்சித் தளபதி அடைமொழி காணப்பட்டது.

ரசிகர்கள் விருப்பப்பட்டு கொடுத்த பட்டம். அதனால் வைத்துக் கொண்டேன் என தோரணை திரைப்பட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பதிலளித்திருந்தார் விஷால்;.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு தனக்கு அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தேவையில்லை. அஜீத் குமார் என்று குறிப்பிட்டால் போதும் என அறிவித்தார் அஜீத்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம்பெற்று வருகிறது. பட்டத்தைத் துறந்த பிறகு வந்த அவரது மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இப்போது அஜீத் வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை வேண்டாம் என உதறிவிட்டார். தனது அடுத்த திரைப்படமான சமர் போஸ்டர்கள் விளம்பரங்களில் வெறும் விஷால் என்றே அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0

  • mtharan Friday, 18 May 2012 04:31 AM

    எப்படி இருந்தாலும் விஜய் போல வருமா?

    Reply : 0       0

    afham Friday, 18 May 2012 02:27 PM

    நல்லா இருக்கு ஜோக்கு

    Reply : 0       0

    PMM Fowmin Saturday, 19 May 2012 12:27 PM

    vijay ajith aha mudiyuma?

    Reply : 0       0

    Nabeel Sunday, 03 June 2012 10:51 PM

    இலக்கை எப்படித்தான் இருந்தலும் நம்ம விஜய் அன்னன் போல வருமா? இளைய தளபதி ரசிகன் நான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X