2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இலங்கைப் பயணத்தால் மீண்டும் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ள அசின்

Menaka Mookandi   / 2012 மே 19 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


இயக்குனர் ஷங்கரின் புதிய திரைப்படத்தில் விக்ரமின் ஜோடியாக தெரிவாகியுள்ளார் நடிகை அசின். இருப்பினும், அவரை அந்த திரைப்படத்தில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று தமிழகத்தில் மீண்டும் அசினுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரெடி திரைப்படத்துக்காக இந்தி நடிகர் சல்மான்கானுடன் இலங்கையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகை அசின், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விருந்து நிகழ்வொன்றிலும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கு எந்த நடிகர் நடிகையும் செல்லக் கூடாது என்ற தடையை மீறி இலங்கை வந்திருந்த நடிகை அசினுக்கு ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புக்களும் கிளம்பியிருந்தன. ஆனால் அவர் அதைக் கண்டு கொள்ளவில்லை. சினிமா உலகினரும் இதெல்லாம் சாதாரணம்  என்று மறந்துவிட்டனர்.

அதற்குப் பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்த காவலன் திரைப்படம் கூட வெளியாகியது. இந்த நிலையில் ஷங்கர் இயக்கவுள்ள புதுத் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க அசின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழர் உணர்வுகளுக்கு எதிராக நடந்து கொண்ட அசினை தனது புதுப்படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல் தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. திரையுலகினரின் தடையை மீறி அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி அந்நாட்டு ஜனாதிபதியுடன் விருந்தும் சாப்பிட்டார்.

ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றவர்களோடு கைகுலுக்கி விட்டு வந்த அசினை அவரது திரைப்படத்தில் ஷங்கர் நடிக்க வைக்கக்கூடாது. மீறி நடிக்க வைத்தால் ஷங்கர் வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்துவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0

  • uvais.m.s Saturday, 19 May 2012 07:12 PM

    ஆரம்பத்துலையே பப்பிளிசிட்டிய கிளப்பி விட்டான்கையா... இனி படம் ஓஹோ என்று வரும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X